இடைத்தேர்தலில் எம். எல்.ஏக்கள் மூலம் விஜய் வைக்கப்போகும் செக்! திமுக, அதிமுக நிலை என்ன? வெளியான ரகசிய தகவல்...!!!



madurantakam-tarapuram-bypolls-candidates

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இரு தொகுதிகளிலும் எந்தக் கட்சி சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தவெக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏக்களே மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

7 தொகுதிகள் காலியான நிலையில் முதல் கட்ட இடைத்தேர்தல்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகிய 6 பேரும் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியானது.

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.... இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டி! எடப்பாடியின் அதிரடி அறிவிப்பு...!!!

இந்நிலையில் முதற்கட்டமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன.

முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கே மீண்டும் வாய்ப்பா?

தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சத்யபாமாவும் மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் பதவியை ராஜினாமா செய்தபோதே, மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கட்சி தலைமை உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக, திமுகவிலும் வேட்பாளர் தேர்வு தீவிரம்

மறுபுறம், அதிமுக ஏற்கனவே இழந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் வலுவான வேட்பாளர்களைத் தேடி வருகிறது. திமுகவும் இந்த இரு தொகுதிகளிலும் தனது பலத்தை நிரூபிக்க சரியான வேட்பாளர்களை களமிறக்குவது குறித்து ஆலோசித்து வருகிறது. இதனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளதுடன், வேட்பாளர் அறிவிப்புக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

 

இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக கோட்டையில் தவெக சந்திக்கும் முதல் சவால்! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு...!!!