ஐயோ... ஒரு நொடியில் உயிர் தப்பினாரா? நடிகர் கிரண் ராஜை கீழே தள்ளிய சிங்கம்! அதிர்ச்சி வீடியோ..!!!
பள்ளி கழிப்பறையை திறந்ததும் கண்ட அதிர்ச்சி! 7-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி...!!!
மீரட்டில் தனியார் பள்ளி ஒன்றில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவன், வகுப்புகள் முடிந்த பிறகு கழிப்பறையில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. மாணவர் உயிரிழப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிப்பறையில் மயங்கிய நிலையில் மாணவன்
திங்கள்கிழமை பள்ளி வகுப்புகள் முடிந்த பின்னர் மாணவன் கழிப்பறைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் அங்கு மயங்கிய நிலையில் கிடந்ததை பள்ளி ஊழியர்கள் கவனித்தனர். இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: தேர்வில் காப்பி அடித்ததாகக் கூறி 8-ஆம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கி... இரு கைகளும் உடைத்த ஆசிரியர்.! இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி...!!!
ஆனால், மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணையை தொடங்கினர்.
மாரடைப்பு காரணமா? உடற்கூறாய்வு அறிக்கைக்காக காத்திருப்பு
முதற்கட்ட விசாரணையில் மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், இதை உறுதி செய்ய உடற்கூறாய்வு அறிக்கை முக்கியமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்யும் போலீசார்
பள்ளி வளாகத்தில் நடந்த மாணவர் மரணம் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மாணவன் கழிப்பறைக்குச் சென்ற நேரம் முதல் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட வரையிலான நிகழ்வுகளை அறிய பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழல் ஏதேனும் உள்ளதா என்பதையும் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மாரடைப்பால் உயிரிழந்த அண்ணன்! கதறி அழுத தம்பி... அடுத்த 3 மணி நேரத்தில் நடந்த அதிர்ச்சி! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்...!!!