BREAKING: சற்று முன்.... இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டி! எடப்பாடியின் அதிரடி அறிவிப்பு...!!!



aiadmk-to-contest-madurantakam-dharapuram-bypolls-alone

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து, வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் பணிகளை கட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை குறிப்பிட்ட காலத்துக்குள் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக கோட்டையில் தவெக சந்திக்கும் முதல் சவால்! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு...!!!

இரு தொகுதிகளிலும் தனித்து களம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்துள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்காமல், தனித்து போட்டி என்ற முடிவை கட்சி தலைமை எடுத்துள்ளது.

வேட்பாளர் தேர்வில் அதிமுக தீவிரம்

இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. விருப்ப மனுக்கள் பெறப்பட்டதும், போட்டியிட விரும்புவோரின் பின்னணி மற்றும் தொகுதியில் உள்ள செல்வாக்கு உள்ளிட்ட அம்சங்களை பரிசீலித்து வேட்பாளர்களை இறுதி செய்ய அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

 

இதையும் படிங்க: அவரைக் காப்பாற்றுங்கள்... கத்தி கூச்சலிட்ட பெண்! எடப்பாடியை காண வந்த அதிமுக வட்ட செயலாளர்கு நடந்த அதிர்ச்சி....! பகீர் வீடியோ..!!!