திமுக சொம்பு என சாடிய பிரசாந்த்.. விஜய் சேதுபதி மீது பாய்ந்த விமர்சனம்!



prashanth-troll-vijay-sethupathi

பிக்பாஸ் வீட்டுக்குள் தொடங்கிய லீடர்ஷிப் விவகாரம், நிகழ்ச்சியைத் தாண்டி தற்போது அரசியல் விவாதமாகவும் மாறியுள்ளது. முதல் வாரத்தில் ஷாதிகாவின் தலைமை குறித்து விஜய் சேதுபதி பேசிய கருத்துகள், நடிகர் விஜய்க்கு எதிரான மறைமுக விமர்சனமா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்தது. 

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலேயே வெளியேற்றப்பட்ட திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமியின் பதிவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்த் ரங்கசாமி தனது பதிவில், கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜய்யை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பலர் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அஜித்தை மட்டும் பணத்தால் விலைக்கு வாங்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், இப்போ இருக்க திமுக சொம்பு நடிகர் சம்பந்தமே இல்லாம மேடையை பயன்படுத்தி கத்திட்டு இருக்கிறாரே.. ஒரு சொம்பு நடிகர்.. அவர மாதிரி அஜித் சாரும் சொம்பு அடிப்பாருன்னு நினைச்சாங்க.. என அவர் விஜய் சேதுபதியை குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய்க்கும் அஜித்துக்கும் இடையேயான நட்பை சுட்டிக்காட்டிய அவர், அந்த நட்பின் காரணமாகவே அஜித் அழைத்ததும் விஜய் லண்டன் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகள்.. முதல்வரை விமர்சித்த விஜய் சேதுபதி?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பிரசாந்த் ரங்கசாமியின் இந்தப் பதிவு, அஜித்தை பாராட்டும் வகையில் அமைந்ததா அல்லது விஜய் சேதுபதியை மறைமுகமாக விமர்சிக்கும் நோக்கத்திலா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப் குறித்து விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரசாந்தின் பதிவும் அதனுடன் இணைத்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகள்.. முதல்வரை விமர்சித்த விஜய் சேதுபதி?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!