அட அட... அம்மா கற்று கொடுக்கும் பாடம் இதுதான்! கடையில் பழத்தை திருடிய குட்டி யானை... அடுத்த நொடி தாய் யானை செய்த செயலை பாருங்க.... நெகிழ்ச்சி வீடியோ..!!!
சாலையோரக் கடையில் இருந்த வாழைப்பழத்தை எடுக்க முயன்ற குட்டி யானையைத் தாய் யானை தடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குட்டி யானை எடுத்த பழத்தை மீண்டும் கடையில் வைப்பது போன்ற காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
வாழைப்பழத்தை எடுக்க முயன்ற குட்டி யானை
சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், சாலையோரக் கடை அருகே சென்றுகொண்டிருக்கும் குட்டி யானை, அங்கு வைக்கப்பட்டிருந்த வாழைப்பழங்களைத் தனது தும்பிக்கையால் எடுக்க முயல்கிறது. இதைக் கவனிக்கும் தாய் யானை, குட்டியைத் தடுத்து நிறுத்துவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அடிஆத்தி.... ஷூவில் ஒளிந்திருந்த எமன்! அதை பார்த்ததும் ஆக்ரோஷத்தை பாருங்க... அதிர்ச்சி வீடியோ..!!!
தாய் யானையின் செயலுக்குப் பிறகு, குட்டி யானை எடுத்த பழத்தை மீண்டும் கடையில் வைப்பது போன்ற காட்சியும் வீடியோவில் காணப்படுகிறது. இந்தக் காட்சிகள் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால், பலரும் வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
இணையத்தில் குவியும் கருத்துகள்
குட்டிகளுக்கு உணவளிப்பது மட்டுமல்லாமல், அவற்றின் நடத்தையையும் தாய் யானைகள் வழிநடத்துகின்றன என்பதை இந்தக் காட்சி நினைவுபடுத்துவதாகப் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். குழந்தைகளுக்கு அன்புடன் சேர்த்து நல்ல பழக்கங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கருத்துகளையும் இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை. மேலும், இது உண்மையான காட்சியா அல்லது AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதா என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.
❤️🐘 बच्चों को सिर्फ बड़ा नहीं, संस्कारों वाला बनाइए!
— NCR पत्रिका (@ncrpatrika) October 28, 2026
हाथी के बच्चे ने दुकान से केला उठाया, तो मां ने उसे वापस रखवा दिया। 🥹❤️
➡️ मां चाहती तो उसे अनदेखा कर सकती थी, लेकिन उसने अपने बच्चे को सही और गलत का फर्क सिखाया।
➡️ क्योंकि अच्छी परवरिश का मतलब सिर्फ प्यार देना नहीं,… pic.twitter.com/kpuQ5arSKY