அரசு பள்ளி ஆசிரியர்கள் சொத்து விவரங்களை பதிவேற்ற.. தமிழக அரசு விடுத்த அதிரடி உத்தரவு..! காலக்கெடுவை தவறினால் அதிரடி நடவடிக்கை...!!!



tamil-nadu-government-school-staff-property-details

தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தங்களது சொத்து, கடன் விவரங்களை அக்டோபர் 31, 2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான விவரங்களை ‘IFHRMS களஞ்சியம்’ செயலியில் பதிவேற்ற வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். காலக்கெடுவுக்குள் விவரங்களை அளிக்காதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சொத்து விவரங்களைப் பதிவேற்ற உத்தரவு

தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள் தொடர்பான விவரங்களை அரசிடம் தாக்கல் செய்வது கட்டாயமாகும். இதன் அடிப்படையில், அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களைச் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: குஷியோ குஷி..! பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை..! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களுக்கான விவரங்களை IFHRMS களஞ்சியம் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணியை உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

காலக்கெடுவைத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை

அக்டோபர் 31-ம் தேதிக்குள் சொத்து விவரங்களைப் பதிவேற்றத் தவறினால், அரசு பணியாளர் நடத்தை விதிகளை மீறியதாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, கடைசி நேரச் சிக்கல்களைத் தவிர்க்க ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முன்கூட்டியே விவரங்களைப் பதிவேற்றுவது அவசியமாகியுள்ளது.

மேலும், அனைத்து பள்ளிகளிலும் இந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை நவம்பர் 2, 2026 அன்று சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், சொத்து விவரங்களைப் பதிவேற்றும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: என் பொண்ணு உயிரோட தான் இருக்கா...! நல்ல சகுனம்.. 2 நாட்களில் வரப்போகும் நல்ல செய்தி! செஞ்சி 7 வயது சிறுமி வழக்கில் தாய் அளித்த பகீர் வாக்குமூலம் !!!