BREAKING: திமுகவில் அடுத்த அவதூறு பேச்சில் சிக்கிய சேகர்பாபு! இரவோடு இரவாக நடந்த சம்பவம்… பரபரப்பில் தமிழக அரசியல்...!!!



dmu-protest-sekar-babu-case

தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக கடந்த 12-ம் தேதி நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குறித்து தரக்குறைவாக பேசியதாக எழுந்த புகாரில் திமுக மூத்த நிர்வாகி சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதையடுத்து, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவதூறு பேச்சு குறித்து புகார்

ஆர்ப்பாட்டத்தின்போது சேகர்பாபு பேசிய கருத்துகள் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதில், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குறித்து அவதூறாக பேசியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என்ன நடக்குது...! அதிமுக - திமுக நெருக்கம்மா? ஒரே போனில் மாறி மாறி பேசிய எம்.எல்.ஏக்கள்...!!!

சென்னை போலீஸார் வழக்குப்பதிவு

புகாரைத் தொடர்ந்து சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் விசாரணையை தொடங்கி, சேகர்பாபு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பேச்சு தொடர்பான தகவல்கள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் குறித்து போலீஸார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

கைது நடவடிக்கை எடுக்கப்படுமா?

வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சேகர்பாபுவிடம் விசாரணை நடத்தப்படலாம் என்றும், அடுத்தகட்டமாக கைது நடவடிக்கை இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 

இதையும் படிங்க: உங்கள் குடும்பத்தினரிடம் காட்ட முடியுமா?.. ஆ.ராசா பேச்சுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடும் கண்டனம்!