தவெக கொடி நிறத்தில் அரசு பேருந்துகள்? சேலத்தில் புதிய பேருந்துகளால் சர்ச்சை!



TVK flag buses in Salem

சேலம் கோட்டத்தில் புதிதாக வரவுள்ள 25 அரசு டவுன் பஸ்கள், தவெக கட்சியின் கொடி நிறங்களைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை, விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் விரைவு போக்குவரத்துக் கழகம் என 8 கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இந்தக் கோட்டங்களின் கீழ் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அரசு டவுன் பேருந்துகளின் நிறம் மாற்றப்பட்டு, மெரூன் மற்றும் பிஸ்கட் நிறங்களுக்கு பதிலாக வெளிர் நீல நிறம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அதே நிறத்திலேயே அரசு டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், சேலம் கோட்டத்திற்கு புதிதாக வந்துள்ள 25 டவுன் பேருந்துகளின் நிறம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற இளைஞர்கள் கைது!

Salem

இந்தப் பேருந்துகள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிறங்கள் தவெக கட்சியின் கொடி நிறங்களை ஒத்திருப்பதாகக் கூறப்படுகிறது.சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இந்த 25 புதிய பேருந்துகளும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரசுப் பேருந்துகளின் நிறம், எந்தவொரு அரசியல் கட்சியின் கொடி அல்லது அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கக் கூடாது. தற்போது புதிதாக வந்துள்ள பேருந்துகளின் நிறம் தவெக கொடியை ஒத்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுபோன்ற சர்ச்சைகளைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 7 மாத கர்ப்பிணி காதலி அடித்துக்கொலை.. நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.! சேலத்தில் திக்., திக் சம்பவம்.!