காதலிப்பவரா நீங்கள்? காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்!

காதலிப்பவரா நீங்கள்? காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்!



What are the reasons to spoil your relationships

வளர்ந்துவரும் நாகரிக உலகில் ஆண்கள் பெண்கள் தங்களுக்குள் சகஜமாக பழகிவருகின்றனர். பின்னாட்களில் இது காதலாகவும் மாறுகிறது. எவளவு விரைவில் காதலர்களாகிறார்களோ அதைவிட விரைவில் பிரிந்தும் விடுகின்றனர். அதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. அவை என்னவென்று பாப்போம்.

காழ்ப்புணர்வு: 
காழ்ப்புணர்வு உங்களின் உறவின் வளர்ச்சியை தடுப்பதோடு கசப்புணர்வையும் ஏற்படுத்தும்.

பொறாமை:
பொறாமைப்படுவது என்பது எதற்கும் நல்லதல்ல. இதை தவிர்த்தால் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பதோடு, உங்கள் மனதும் லேசாக இருக்கும்.

விரிசல்

பரிசுகள் பயன்படாது:
உங்கள் தவறை மறக்க எப்போதும் பரிசுகளை பயன்படுத்தக்கூடாது. இது அந்த நேரத்துக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதாக உள்ள உணர்வை ஏற்படுத்திவிடும்.

தேவையில்லாத நாடகம்:
உணர்வுகளை வைத்து தேவையில்லாத நாடகத்தை தவிர்க்க வேண்டும். இதனால் அடுத்த முறை உங்களிடம் பேசுவதற்கே அவர்களை யோசிக்க வைக்கும்.

ஆக்ரோஷம்: 
கேலி, கிண்டல், திட்டுவது யாருக்குமே பிடிக்காது. சிறு சிறு விஷயங்களை பேசித்தீர்த்துக்கொள்வது நல்லது.