லைப் ஸ்டைல் சமூகம்

சாலையை கடக்கமுடியாமல் தத்தளித்த வயதான பெண்! கண்டுகொள்ளாத பொதுமக்கள்! மனநலம் பாதிக்கப்பட்டவரின் கண்ணீர் சிந்தவைக்கும் வீடியோ!

Summary:

Video of the tears of the mentally ill


பொதுவாழ்க்கையில் பலர் பொது சேவையை செய்ய மறந்துவிடுகின்றனர். சாலையில் ஒருவர் வாகனத்தில் இருந்து விழுந்துவிட்டால் கூட அவர்களை காப்பாற்ற கூட சிலருக்கு மனம் வருவதில்லை. அதற்கு காரணம் விறுவிறுப்பான நகர வாழ்க்கை, நாம் எதற்கு தேவையில்லாமல் உதவி செய்யபோயிட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறோம் என்ற மனநிலை.

ஆனாலும் இந்த பரபரப்பான வாழ்க்கைமுறையில் மக்களுக்கு உதவும் சில நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானாக வளரும் என்பது பழமொழி" எனவே அனைவரும் கஷ்டப்படுபவர்களுக்கு எதாவது ஒரு முறையில் உதவி செய்யுங்கள். அந்த உதவி, உங்களுக்கோ அல்லது உங்களது அடுத்த தலைமுறைக்கோ புண்ணியத்தை தேடி தரும்.

தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு சாலையில் பாப்பரப்பாக வாகனங்கள் போய்க்கொண்டிருக்கும்பொழுது இளம் வயதினர் சாமர்த்தியமாக சாலையை கடக்கின்றார். ஆனால் ஒரு வயதான தாய் சாலையை கடப்பதற்கு தத்தளித்து கொண்டிருக்கிறார். இதனை பார்த்துக்கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் திடீரென எழுந்து, சாலையை மறித்து போக்குவரத்து காவலர் போல வாகனங்களை நிறுத்தி அந்த வயதான பெண்ணை சாலையை கடக்கவைத்துள்ளார். 

இதனைப்பார்த்த அந்த தாய் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை பார்த்து என்ன சொல்வது என்றே தெரியாமல் திகைத்து நின்றார். ஆனாலும் அந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் அந்த பெண்ணிடம் நன்றியை கூட எதிர்பார்க்காமல் ஹீரோவை போல சென்றார். அந்த பெண்ணை பலர் பார்த்து கண்டுகொள்ளாமல் சென்ற நிலையில், யாரோ ஒரு பெண் நினைக்காமல், தாய்க்கு உதவி செய்வது போல அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். உங்களுக்கும் அந்த நபரை பாராட்ட மனமிருந்தால் அதனை கமெண்டில் பதிவிடுங்கள்.


Advertisement