லைப் ஸ்டைல்

'எனக்கு எந்த லாக்-டவுனும் இல்லை' கிடுகிடுவென உயரும் தங்கம்: இதோ இன்றைய விலை நிலவரம்.!

Summary:

Today gold rate in chennai

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே போவதால் நாட்டின் பல பகுதிகளில் இன்றும் லாக்-டவுன் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் எளிய மக்கள் முதல் அனைத்து நிலையினரும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் மக்களின் பொருளாதாரம் பின்னோக்கி செல்லக்கூடிய நிலையில் உள்ளது.

ஆனால் தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தவரையில் எங்களுக்கு எந்த லாக்-டவுனும் இல்லை என்பது போல் நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் உள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5, 037 . நேற்றைய விலை 5, 013 . இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களில் இது மிகப் பெரிய விலையேற்றமாகும்.

அதேபோல, நேற்று 40, 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 192 ரூபாய் உயர்ந்து 40, 296 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.5, 262 லிருந்து இன்று ரூ.5, 286 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 42,096 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 192 ரூபாய் உயர்ந்து 42,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement