லைப் ஸ்டைல்

வீட்டில் இருந்து இந்த பொருட்களை வெளியேற்றினால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்! என்னெல்லாம் தெரியுமா?

Summary:

These things should not keep in house

வாஸ்து, சாஸ்திரம், சம்ப்ரதாயம் இவற்றை பார்ப்பதை இன்றுவரை நாம் அனைவரும் வழக்கமான ஒன்றாக வைத்துளோம். அந்த வகையில் ஒருசில பொருட்களை வீட்டில் வைத்திருப்பதால் வீட்டின் செல்வம் குறையும் என்கிறது சாஸ்திரம். அவை என்னென்ன பொருட்கள் என்று பார்க்கலாம் வாங்க.

1 . அழுக்கான நுழைவாயில்:
வீட்டின் நுழைவாயில் மிகவும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். அதேபோல் வீட்டின் நுழைவாயில் அருகே குப்பைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். அது நமது வீட்டிற்குள் நல்ல சக்திகள் வருவதை தடுத்துவிடுமாம்.

2 . மூழ்கும் அல்லது உடைந்த கப்பல்:
ஒரு கப்பல் மூழ்குகிறது என்றால் அது அதன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது என்று அர்த்தம். எனவே வீட்டில் அதுபோன்ற படங்களை வைத்திருந்தால் நமது முன்னேற்றத்திற்கு அது தடையாக இருக்கும் என்கிறது ஸாஸ்த்திரம்.

3 . போர் அல்லது மகாபாரதத்தின் புகைப்படங்கள்:
போர் நடப்பதுபோன்ற காட்சிகள், மகாபாரதத்தின் காட்சிகள் உள்ள புகைப்படங்கள், காட்சி பொருட்கள் போன்றவற்றை வீட்டில் வைப்பதால் வீட்டில் செல்வம் சேர்வது தடைபடும்.

4 . உடைந்துபோன சிலைகள்:
உடைந்துபோன சாமி சிலைகளை வீட்டில் வைத்திருக்க கூடாது. அப்படி வைத்திருப்பது கெட்ட சக்திகளையும், பல்வேறு பிரச்சனைகளையும் வீட்டிற்குள் கொண்டுவருகிறது.


Advertisement