திருமணத்துக்குப் பிறகும் ஸ்டைலிஷ் லுக்.. வெள்ளை நிற ஆடையில் கீர்த்தி சுரேஷின் மின்னும் புகைப்படம் வைரல்!?



keerthi-suresh-modern-photos-viral

கீர்த்தி சுரேஷின் திரைப்பயணம் 

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.  இவர் முதன்முதலில் பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரைபயணத்தை தொடங்கினார் . பின்னர், கதாநாயகியாக தமிழில் இவர் முதன் முதலில் நடித்த படம் ஏ.எல் விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்'.

keerthi Suresh

அதன்பிறகு வெளியான 'ரஜினி முருகன்' திரைப்படம் தான் கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது, தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு வலுவான இடத்தை பிடித்துள்ள முன்னணி நடிகையாக திகழ்கிறார். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க: தெய்வத்திருமகள் சாராவா இது! பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங் ஜோடியாக நடிக்கும் சாரா ! இணையத்தை தெறிக்கவிட்ட புரோமோ வீடியோ.......

தேசியவிருது பெற்ற கீர்த்தி சுரேஷ் 

கீர்த்தி சுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் இவரின் நடிப்பு திறமையை பாராட்டி தேசிய விருது பெற்றுள்ளார். தற்போது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதன்படி பெண்குயின், சாணிக் காயிதம், ரகு தாத்தா போன்றவற்றிலும் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தார்.

வைரலாகும் புகைப்படங்கள்

சமீபத்தில், அவர் தனது காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாலிவுட்டில் இவர் நடித்த 'பேபி ஜான்' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், தாம்பத்ய வாழ்வில் மகிழ்ச்சியோடு காலத்தை செலவழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

keerthi Suresh

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடிப்பவர் கீர்த்தி சுரேஷ். இதன்படி தற்போது வெள்ளை நிற உடையில் ஸ்டைகாக எடுத்த சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்புகைபடம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றன.

இதையும் படிங்க: ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் காந்தாரா 2.! எப்போ ரிலீஸ்?? வெளிவந்த அறிவிப்பு!!