அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பல்டி அடிக்கும் தங்கம் விலை.. இன்றைய தங்கம் விலை நிலவரம்! அதிருப்தியில் பாமர மக்கள்....
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பாமர மக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வரை விலை குறைந்திருந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.9,060 ஆகவும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.72,480 ஆகவும் பதிவாகியுள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,010, சவரனுக்கு ரூ.72,080 ஆக இருந்தது.
கடந்த வருடங்களில் 60 ஆயிரத்திற்கு கீழாக விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது 70 ஆயிரத்தை தாண்டி செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் வருங்கால விலை நிலவரம் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: உச்சகட்ட மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்! இரண்டாம் நாளாக குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்...
எதிர்காலத்தில் தங்கம் விலை குறையுமா
தங்கம் விலை மீண்டும் குறைய வாய்ப்பிருக்கிறதா என்பதைப் பற்றிய உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால், விலை இன்னும் கூடும் சாத்தியம் காணப்படுகிறது.
வெள்ளியின் விலை
இன்று வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. கிராமுக்கு ரூ.120 மற்றும் ஒரு கிலோவுக்கு ரூ.1,20,000 என விற்பனை நடைபெற்று வருகிறது.