உச்சகட்ட மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்! இரண்டாம் நாளாக குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்...



gold-price-drops-june24-chennai

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்தும் குறைந்தும் வருவதால் பொதுமக்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இன்று தங்கம் விலை சற்று குறைந்ததால், பலருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

சென்னையில் இன்று தங்கம் எவ்வளவு

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்துள்ளது. இதன் பேரில்,

ஒரு கிராம் தங்கம் ரூ.9,230 இருந்த நிலையில், இன்று ரூ.9,155 ஆக குறைந்துள்ளது.

ஒரு சவரன் விலை ரூ.73,840 இருந்து ரூ.73,240 ஆக ரூ.600 குறைந்துள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலை குறைவால் மகிழ்ச்சியில் பொதுமக்கள்

தங்கம் விலை கடந்த சில வாரங்களில் ரூ.70,000 க்கும் மேல் உயர்ந்த நிலையில் காணப்பட்டாலும், இன்று ஏற்பட்ட சிறிய குறைவு, நகை வாங்க திட்டமிட்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது.

இதையும் படிங்க: நகைபிரியர்கள் மகிழ்ச்சி! அதிகரித்த வேகத்தில் குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்...

வெள்ளி விலையும் சற்று குறைவு

தங்கத்துடன் ஒப்பிடும் போது, வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.119.00

ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000 என விற்பனை செய்யப்படுகிறது.