டீ பிரியர்களே உங்களுக்குத்தான்... டீ குடிப்பது உடல்நலத்திற்கு நல்லதா? அல்லது கெட்டதா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்..!! tea-is-good-to-health

காலையில் எப்போது நாம் எழுந்தாலும் முதலில் நாம் தேடும் விஷயமாக இருப்பது டீ. அப்படிப்பட்ட டீ உடலுக்கு நன்மை தருமா? அல்லது தீமை தருமா? என்பதை தெரிந்து கொள்ளலாம். அதை பாலில் கலந்து குடிக்கலாமா? அல்லது தண்ணீரில் கலந்து பிளாட்டியாக குடிக்கலாமா? என்ற குழப்பமும் இருக்கிறது. இது குறித்த ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. 

40 வயது முதல் 69 வயது வரை உள்ளவர்களின் உணவு பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் தேனீர் குடிப்பது போன்ற விஷயங்கள் ஆய்வுகளில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் மூலமாக 85 விழுக்காடு பேர் டீ குடிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். 89 விழுக்காடு நபர்கள் ஐந்து முதல் இரண்டு கப் வரை பால் கலக்காமல் பிளாக்டீயும் குடித்து வருகிறார்கள். 

ஒரு நாளைக்கு இரண்டு கப் டீ குடிப்பதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாத அறிகுறிகள் குறைகிறது. ஒரு நாளைக்கு மூன்று கப் டீ குடித்தால் இறப்பு அபாயம் 12 விழுக்காடு குறைகிறது. நீரிழிவு நோய், பக்கவாதம், இதய நோய் போன்ற அபாயத்தையும் குறைக்கிறது.