உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா? அப்போ கண்டிப்பா சிறுநீரகம் பாதிப்பு!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா? அப்போ கண்டிப்பா சிறுநீரகம் பாதிப்பு!


Symptoms of kidney failure

மனித உடல் ஒவ்வொரு உறுப்புகளும் மிகவும் முக்கியமானது. அதில் மிகவும் முக்கியமான உறுப்புகள் இதயம் மற்றும் சிறுநீரகம். இதயம் செயலிழந்தால் உடனடி மரணம். அதேபோல் சிறுநீரகம் செய்திருந்தால் தினம் தினம் மரணம் என கூறுவார்கள்.

இதில் சிறுநீரகம் நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் முக்கியமான உறுப்பு. அதனால் நாம் சிறுநீரகத்தை மிகவும் வைத்திருப்பது அவசியமாகும். இதில் ஒரு சில அறிகுறிகள் ஏற்பட்டால் நமக்கு சிறுநீர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளா என்பதை அறிந்து கொள்ளலாம்.

Kidney failure

அதன்படி சிறுநீரின் நிறம் மாறினால் அல்லது சிறுநீர் அசாதாரணமாக இருந்தால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

அதேபோல் உடலில் உள்ள கழிவுகள் ரத்தத்துடன் சிறுநீராக வெளியேறினாலும், துர்நாற்றத்துடன் வெளியேறினாலும் சிறுநீரக நோய் ஏற்படப்போகிறது என்பதை குறிக்கிறது.

அதேபோல் அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி வந்தாலும் சிறுநீரகத்தை சோதனை பார்ப்பது நல்லது. குறிப்பாக சிறுநீரகம் அமைந்துள்ள பின்பகுதியில் வலி ஏற்பட்டால் சிறுநீரகம் செயல் இழப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.