
not maried reason
தற்போதைய வாழ்க்கை முறையில் 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் பல ஊர்களில் குறைந்தது 20க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள். அதற்கு காரணம் படிப்பும், வேலையும் தான். முன்னொரு காலத்தில் ஊருக்குள் ஒருவர் மருத்துவ படிப்பு, ஒருவர் பொறியியல் படிப்பு என படித்து வந்தனர். ஆனால் தற்போதைய நடைமுறையில் பொறியியல் படித்த பலபேர் தகுந்த வேலை கிடைக்காமல் சுயதொழில், சம்பந்தம் இல்லாத துறையில் பணி, பலருக்கு வேலையில்லா திண்டாட்டம் என எண்ணற்ற காரணங்கள் உள்ளன.
தற்போதைய பல பெண்கள், தனக்கு வரும் கணவன் இஞ்சினியரிங் முடித்து, சென்னை, பெங்களூர் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும். குறைந்தது 40,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றனர்.
ஆனால் வேலையில்லா திண்டாட்டத்தால் பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுய தொழில் செய்து வருகின்றனர். ஆனால் சுய தொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் விரும்புவது இல்லை. பெண் வீட்டாரும் விரும்புவது இல்லை. ஆனால் தற்போது கொரோனா சமயத்தில் பலரும் வெளி மாவட்டங்களில், மாநிலங்களில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரிலேயே தொழில் தொடங்கியுள்ளனர். எனவே வரும் காலங்களில் பெண்களின் எத்ரிர்பார்ப்புகளும் மாறவேண்டும் என்பதே பல இளைஞர்களின் கோரிக்கைகளாக உள்ளது.
Advertisement
Advertisement