இந்தியா உலகம் லைப் ஸ்டைல்

என்னப்பா தாடி இது..? ஆண்கள் உலகின் புதிய ஸ்டைல்.. குரங்கு வால் தாடி.. வைரலாகும் புகைப்படங்கள்..

Summary:

ஆண்கள் உலகின் முது முயற்சியாக குரங்கு வால் தாடி ஸ்டெயில் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஆண்கள் உலகின் முது முயற்சியாக குரங்கு வால் தாடி ஸ்டெயில் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக மற்றவர்கள் முன்பு தாம் பார்ப்பதற்கு அழகாக, ஸ்டெயிலாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு மட்டும் இல்லாமல் அந்த ஆசை ஆண்களுக்கும் இருப்பது உண்டு. ஆண்களை பொறுத்தவரை அழகு என்றால் அதில் முக்கிய பங்குவகிப்பது அவர்களின் அழகான ஹேர் ஸ்டெயிலும், தாடியும்தான்.

நீண்ட தாடி, முறுக்கு மீசை, பிரெஞ் தாடி இப்படி பலவிதமான தாடி ஸ்டெயிலுடன் ஆண்கள் வலம்வருவதை பார்த்திருப்போம். ஆனால் தற்போது ஆண்கள் உலகின் புது முயற்சியாக குரங்கு வால் தாடி ஸ்டைலில் ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்டாகிவருகிறது.

அது என்ன குரங்கு வால் தாடி என கேட்குறீர்களா? உதட்டின் மேல் ஒருபுறம் தொடங்கி மறுபுறம் கீழறங்கி தாடையை சுற்றிக்கொண்டு, மறுகன்னம் வழியாக மேலே ஏறி காதுக்கு அருகே தலைமுடியுடன் இணைவதுதான் இந்த ஸ்டைல்.

சொன்னால் புரியாது. அந்த புது ஸ்டெயிலை நீங்களா பாருங்கள்.


Advertisement