சுவையான மரவள்ளி கிழங்கு மிட்டாய்.. வீட்டிலேயே செய்வது எப்படி?
சீசன் காலங்களில் கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கில் மிட்டாய் செய்யலாம்.
கப்பக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, குச்சிவள்ளிக்கிழங்கு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் மரவள்ளிக்கிழங்கை பெரும்பாலானோர் அவித்தும், சிலர் பொரித்தும் சாப்பிடுவார்கள். இன்று இதில் சுவையான மிட்டாய் செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.
செய்யத் தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 3,
தேங்காய் துருவல் - 1 கிண்ணம்,
நாட்டு சர்க்கரை / கருப்பட்டி - இனிப்புக்கு தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 2 சிறிய கரண்டி,
வாழை இலை - சிறிதளவு
இதையும் படிங்க: ஹோட்டல் ஸ்டைல் மசாலா முட்டை பஜ்ஜி.. மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி.!
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட மரவள்ளிக்கிழங்கை பீட்ரூட்/கேரட் போல, தூள் தூளாக சீவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனை வெண்ணிற ஆடையில் இட்டு நன்கு அழுத்தி பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மரவள்ளிக்கிழங்கு சீவலில் உள்ள நீர் வெளியேறியதும் அதனுடன் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசைந்து எடுக்க வேண்டும்.
இறுதியில் இதனை வாழை இலையில் இட்டு சிறிய உருண்டை போல அல்லது மிட்டாய் வடிவில் பிடித்து இட்லி போல வேகவைத்து எடுத்தால் சுவையான மரவள்ளிக்கிழங்கு மிட்டாய் தயார்.
வீடியோ நன்றி: mskay.cooked tamil
இதையும் படிங்க: கோடையின் வரம் தயிர் சாதம்.. டேஸ்டியாக செய்வது எப்படி?