3ம் வகுப்பில் பலாத்காரம்.. 8ம் வகுப்பில் கட்டிக்கொடுத்த மாணவி.. 'குட் டச் பேட் டச்' அம்பலப்படுத்திய அதிர்ச்சி உண்மை.! 



Third-Grade Sexual Assault Revealed After Five Years: Class 8 Student Speaks Out Following Good Touch–Bad Touch Awareness Session

மூன்றாம் வகுப்பு படிக்கும்போது தன்னை பலாத்காரம் செய்த நபரை சிறுமி விழிப்புணர்வால் அம்பலப்படுத்தினார். 

டச்: 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில், கடந்த 23ம் தேதி ஆசிரியை 8 ம் வகுப்பு மாணவிகளுக்கு குட் டச் பேட் டச் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். மேலும், இதுபோல நடந்திருந்தால் தன்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து தெரிவிக்குமாறு கூறி இருக்கிறார். 

இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து ஓட்டுநர் செய்த கொடுமை.. சங்கரன்கோவிலில் பதறவைக்கும் சம்பவம்.!

Tiruvannamalai

8 ம் வகுப்பு மாணவி: 

அச்சமயம், 8 ம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியையிடம் சென்று, 2021 ம் ஆண்டில், அதாவது மாணவி 3 ம் வகுப்பு பயின்று வந்தபோது தோழிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்ததாகவும், அங்கு வந்த நபர் ஒருவர் தனது கையைப்பிடித்து இழுத்துச் சென்று வீட்டுக்குள் அழைத்து ஆடையை கலைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒருகட்டத்தில் பலாத்காரம் செய்து இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்வேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். 

Tiruvannamalai

5 ஆண்டுகள் கழித்து அம்பலமான உண்மை: 

இந்த விஷயத்தைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, சிறுமியின் தாயை அழைத்து பேசி இருக்கிறார். பின் 5 ஆண்டுகள் கழித்து நடந்த விஷயம் தொடர்பாக ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ஆரணி கொசப்பாளையம், முனுசாமி தெருவில் வசித்து வந்த கூலித்தொழிலாளி ஐயப்பனை (வயது 42) கைது செய்தனர். 

இதையும் படிங்க: நண்பருடன் பேசிய பெண்ணை தனியே அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறல்.. காவலர் கைது.. கோவையில் ஷாக்.!