கோடையின் வரம் தயிர் சாதம்.. டேஸ்டியாக செய்வது எப்படி?
தயிர் சாதம் கோடை காலத்தில் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும்.
ஒவ்வொரு கோடைகாலமும் மக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட நேரிடும். இந்த நேரத்தில் குளிர்ச்சியான உணவுகள் மக்களுக்கு விருப்பமான ஒன்றாகும். தென்னிந்தியாவை பொறுத்தவரையில் தயிர்சாதம் கோடைக்கு ஏற்றது. அதனை சுவையாக செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கிண்ணம்,
தயிர் - 1 கிண்ணம்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4
நறுக்கிய இஞ்சி - சிறிதளவு,
கொத்தமல்லி, கறிவேப்பில்லை நறுக்கியது - சிறிதளவு,
எண்ணெய் - 4 கரண்டி,
கடுகு, உளுந்து - தாளிக்க
கடலைப்பருப்பு - 4 கரண்டி,
மிளகாய் வத்தல் - 4,
பெருங்காயம் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு
இதையும் படிங்க: கிராமத்து சுவையில் மத்தி மீன் குழம்பு.. வீட்டிலேயே நாவூற செய்து அசத்துங்கள்.!

செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட பாத்திரத்தில் இளம் சூடுள்ள சாதம், தயிர், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு-உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பில்லை, இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.
இந்த தாளிப்பு தயாரானதும் அதனை தயிர் சாதம் கலவையின் மீது ஊற்றி கிளறி இறக்கினால் சுவையான தயிர் சாதம் தயார். வேலைக்கு இதனை காலையில் செய்து எடுத்து செல்வோர், சிறிது பால் சேர்த்து கிளறி எடுத்துச் செல்லலாம்.
கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவது வைட்டமின்கள், கனிமங்களை உடலுக்கு கொடுக்கும். அதே நேரத்தில் இரவில் சாப்பிடுவதை தவிர்க்கலாம். விருப்பம் இருப்பின் கேரட், மாங்காய் நறுக்கியும் சேர்த்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க: செட்டிநாடு ஸ்டைல் காளான் தொக்கு.. சாதம், சப்பாத்திக்கு செம்ம காம்போ.!