கிராமத்து சுவையில் மத்தி மீன் குழம்பு.. வீட்டிலேயே நாவூற செய்து அசத்துங்கள்.!



Authentic South Indian Village Style Mathi Fish Curry Recipe Tamil

கிராமத்து சுவையில் அசத்தலான மாங்காய் சேர்த்த மத்தி மீன் குழம்பு செய்வது எப்படி? என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். வீட்டிலேயே சுவையாக செய்து சாப்பிடுங்கள்.

அசைவ வகை கடல் உணவுகளில் பலரும் விரும்பி உண்ணும் உணவு மீன்.  இதில் அதிக முள் கொண்ட மீன் என்று ஒதுக்கப்படும் மத்தி மீனில் செய்யப்படும் உணவுகள் அதிக சுவையுடன் இருக்கும். இதில் முள் இருப்பது பலருக்கும் பிரச்சனையாக இருந்தாலும், குழம்பின் சுவை அதனை விரும்ப வைக்கும். இன்று கிராமத்து சுவையில் மத்தி மாங்காய் மீன் குழம்பு செய்வது எப்படி? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள் : 

மத்தி மீன் - 10 
மாங்காய் - 1 
தக்காளி - 3 
பச்சை மிளகாய் - 3 
சின்ன வெங்காயம் - 5 
தேங்காய் துருவியது - 1/2 கப் 
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி 
மிளகாய் வத்தல் தூள் - 1 தேக்கரண்டி 
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
புளி தண்ணீர் - 1 கப்
கறிவேப்பிலை - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் - தேவைக்கேற்ப 

இதையும் படிங்க: ருசியான, உடலுக்கு சத்துக்களை கொடுக்கும் கொண்டைக்கடலை குழம்பு.. செய்வது எப்படி?

மத்தி மீன் குழம்பு

செய்முறை: 

  1. முதலில் மத்தி மீனை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின் மாங்காய், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். 
  2. மசாலா தயார் செய்வதற்கு இஞ்சி சாறு, துருவிய தேங்காய், வத்தல் தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். 
  3. சுத்தம் செய்து வைத்துள்ள மத்தி மீனுடன் மாங்காய், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து முதலில் தாளிக்க வேண்டும். 
  4. பின் மாங்காய், தக்காளி, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தண்ணீர், புளித்தண்ணீர், மத்தி மீன் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். 
  5. இறக்கும் தருவாயில் சிறிதளவு கருவேப்பிலை தூவ சுவையான மத்தி குழம்பு தயார்.

இதையும் படிங்க: வயிற்றுப்புண்ணுக்கு நிரந்தர தீர்வு.. ருசியான ஆட்டுக்குடல் குழம்பு செய்வது எப்படி?