செட்டிநாடு ஸ்டைல் காளான் தொக்கு.. சாதம், சப்பாத்திக்கு செம்ம காம்போ.!
செட்டிநாடு ஸ்டைல் காளான் தொக்கு வீட்டிலேயே செய்வது எப்படி? என காணலாம்.
சைவப் பிரியர்கள் பலருக்கும் பிடித்த விருப்பமான உணவு காளான். காளானில் மசாலா, கிரேவி, 65, மஞ்சூரியன், பெப்பர் ஃப்ரை என பல விதமான வகைகளில் உணவு சமைத்து சாப்பிடலாம். இன்று சுவையான செட்டிநாடு ஸ்டைலில் காளான் தொக்கு செய்வது எப்படி? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். ஒரே மாதிரியாக வீட்டில் காளான் சமைப்போர் இன்று ஒரு மாற்றத்திற்காக அதனை முயற்சித்தும் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
காளான் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
இதையும் படிங்க: கிராமத்து சுவையில் மத்தி மீன் குழம்பு.. வீட்டிலேயே நாவூற செய்து அசத்துங்கள்.!
வறுத்து அரைக்க:
தனியா - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 1
இலவங்கம் - 1

செய்முறை:
முதலில் காளானை நீளமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
வறுக்க வேண்டிய பொருட்களை வாணலியில் சேர்த்து எண்ணெய் சேர்க்காமல் வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இவை வதங்கியதும் காளானை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொதிக்க விட வேண்டும்.
இறுதியாக வறுத்து அரைத்த கலவையை சேர்த்து சுமார் மூன்று நிமிடங்கள் வேகவைத்து இறங்கினால் சுவையான காளான் தொக்கு தயார். இது சப்பாத்தி சாதம், போன்றவைகளுக்கு சுவையாக இருக்கும்.