"ஆசிட் வீசிடுவேன்" காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல்..! 



Vellore Man Arrested for Allegedly Threatening Woman with Acid Attack After She Rejected His Advances

தன்னுடன் காதல் வயப்பட்ட மறுத்தால் கொலை செய்வேன் என மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.  

ஓட்டுநர்: 

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, காளாம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் ஹரி (வயது 27). இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். காட்பாடி பகுதியில் 26 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். 

இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவல்துறை அதிகாரி போக்ஸோவில் அதிரடி கைது.!

காதல்: 

இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக காதல் ஜோடி பிரிந்து இருந்துள்ளது.

Crime news 

வற்புறுத்தல்: 

இதனிடையே, சில நாட்களாகவே ஹரி இளம்பெண்ணை பின்தொடர்ந்து காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இளம்பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரின் மீது ஆசிட் வீசுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். 

கைது: 

இதனால் பயந்துபோன இளம்பெண் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!