கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீர்க்கங்காய் சட்னி.. வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்வது எப்படி?.!!

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீர்க்கங்காய் சட்னி.. வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்வது எப்படி?.!!


How to prepare Peerkangai chutney

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீர்க்கங்காய் சட்னி எப்படி செய்வது என்று விளங்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

பீர்க்கங்காயில் அதிக அளவிலான பீட்டாகரோட்டின் உள்ளது. இதனால் பார்வை திறன் அதிகரிக்கவும், பார்வைக் கோளாறுகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் பீக்கங்காய் முக்கிய பங்காற்றுகிறது. 

அத்துடன் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலை தேற்றுவதிலும் கூட பீர்க்கங்காய் பயன்படுகிறது.

தேவையான பொருட்கள் :

பீர்க்கங்காய் - 1 கப் 

சின்ன வெங்காயம் - 1 கப்

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

வரமிளகாய் - 4 

தக்காளி - 1 

உப்பு - தேவைக்கேற்ப 

கொத்தமல்லி - 1 கைப்பிடி

Peerkangai chutney

செய்முறை :

★முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வர மிளகாய் மற்றும் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

★வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். 

★பின் தக்காளி வெந்து மசிந்ததும் பீர்க்கங்காயை எண்ணெயில் போட்டு மூன்று நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

★அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவைக்க வேண்டும்.

★ஆறியதும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அரைத்தால் பீர்க்கங்காய் சட்னி தயாராகிவிடும்.