தன்னைவிட பெரிய மலை பாம்பை விழுங்கும் நல்ல பாம்பு! வைரல் வீடியோ!cobra-eats-rock-snake-video-goes-viral

பொதுவாக மனிதன் உட்பட அணைத்து உயிரினங்களுமே தங்களின் வாழ்வாதாரத்திற்காக மற்ற உயிரினங்களை சார்ந்துள்ளன. மனிதன் விலங்குகளை வேட்டையாடுவதும், விலங்குகள் மற்ற விலங்குகளை வேட்டையாடுவதும் உலகம் தோன்றிய காலம் முழுவதும் நடந்துவரும் வழக்கமான ஓன்று.

இதில் பாம்புகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தவளைகள், நத்தைகள், பூச்சிகள் போன்ற சிறு சிறு உயிரினங்களை வேட்டையாடுவது வழக்கம். இதில், பெரியவகை பாம்புகளாக கருதப்படும் மலைப்பாம்புகள் ஆடு, மாடு போன்ற விலங்குகளையும், சமயத்தில் மனிதர்களையும் கூட விழுங்குகின்றன.

Mystery

சில நேரங்களில் பாம்புகள் தன் இனத்தை சேர்ந்த பாம்புகளை விழுங்கும் சம்பவங்கள் கூட நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் தன்னைவிட பலமடங்கு பெரிய மலைப்பாம்பு ஒன்றை நல்ல பாம்பு விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது. மலைப்பாம்ப்பை விழுங்க முடியாமல் அந்த நல்ல பாம்பு திணறும் காட்சியை நீங்களே பாருங்கள்.