லைப் ஸ்டைல்

சுவையான மொறு மொறு முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி...

Summary:

சுவையான மொறு மொறு முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி...

ஈவ்னிங் டைமில் மிக எளிதாகவும், சுலபமாகவும் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இந்த முட்டை கோஸ் பக்கோடாவை சுவையாக சீக்கிரத்தில் செய்து விடலாம்.

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – 1 கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்–1,  பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து முதலில் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

அதன் பின் மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் – 1 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து உங்கள் கையை கொண்டு நன்றாக அழுத்தம் கொடுத்து பிசைய வேண்டும். (உங்களுடைய வீட்டில் வெண்ணெய் இல்லை என்றால் சுடச்சுட எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளுங்கள்.)

முட்டைக்கோஸில் இருந்தே தண்ணீர் விடத் தொடங்கும். அதன் பின்பு மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 1/4 கப் இந்த பொருட்களை சேர்த்து மீண்டும் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அழுத்தம் கொடுத்து நன்றாக பிசையுங்கள். முட்டைக்கோஸ் வெங்காயத்தில் இருந்தே தண்ணீர் விடத் தொடங்கும். இதுவே உங்களுக்கு பக்கோடா மாவு பக்குவத்திற்கு வந்துவிடும். 

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ரெடி செய்த மாவை கிள்ளி கிள்ளி எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி பொன்னிறம் வரும் வரை சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான முட்டைகோஸ் பக்கோடா தயார்


Advertisement