மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்மையை அதிகரிக்கும் தூதுவளை; மேலும் எண்ணற்ற பலன்கள் உள்ளே..

Summary:

Benefits of thoothuvalai

ஆங்கில மருத்துவம் தலை தூக்கவே நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல மருத்துவ பலன்கள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன.

நம்மைச் சுற்றி வளரும் செடி கொடிகளின் மூலமே நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இதனை நமது முன்னோர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாம் அவற்றை இப்போது உபயோகிப்பதில்லை. 

நமது பாரம்பரிய மருத்துவம் மறைந்து விடக்கூடாது என்பதற்கான ஒரு பதிவுதான் இது. இந்த பதிவில் நாம் தூதுவளையின் பலன்களை பற்றி பார்ப்போம். 

தூதுவளையானது வயல்வெளிகளில் தானாக வளர்ந்து வரும் ஒரு மமமுட்செடி வகையை சேர்ந்தது. இது கிராமங்களில் அதிக அளவில் கிடைக்கக்கூடியது. இதனை நமது வீடுகளில் செடியாக வளரச் செய்யலாம்.

சளி, இருமல் நீங்க:
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.

ஆண்மை சக்தி அதிகரிக்க:
தூதுவளைக் கீரையை நன்றாக வதக்கி புளியுடன் சேர்த்து குழம்பாக வைத்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.

எலும்பினை பலப்படுத்த:
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. தூதுவளை இலையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.

வாதம், பித்தம் நீங்க:
வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள் சாப்பிட்டபின், தூதுவளைக் கீரையை சமையல் செய்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த நோய் தீரும்.


Advertisement