வேண்டாம்!! வேண்டாம்!! அந்த மருந்தை இனி கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டாம்!! உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்

வேண்டாம்!! வேண்டாம்!! அந்த மருந்தை இனி கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டாம்!! உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்


WHO suggested to stop using remdesivir for corona treatment

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிரை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது.

இந்தியா மட்டுமில்லாமல் உலகின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுவதும் நாள்தோறும் பலலட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நாடுகளும் போராடி வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உலகளவில் பெரிய அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களும் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்ற போராடி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிரை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக ஐவர்மெக்டின் என்ற மருந்து பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் இந்த மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த தேவை இல்லை என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

தற்போது ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந்தும் நீக்கியுள்ளது. அதேநேரம் இந்த மருந்து பயன்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.