தமிழகம் இந்தியா

ரயில், விமான சேவைகள் எப்போது துவங்கும்?

Summary:

When train and flight service started

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதுவரை அனைத்து வகை பயணிகள் ரெயில்கள் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்க்காக பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல் படுத்தி உள்ளன.


இந்தியாவிலும் கடந்த மாதம் 24-ந் தேதி ஊரடங்கை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். பின்னர் கொரோனா பரவல் அதிகரிப்பதால் ஊரடங்கு அடுத்த மாதம்(மே) 3-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்தநிலையில் பயணிகளுக்கான அனைத்து ரயில் சேவைகளும் வருகிற மே மாதம் 3-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் நாடு முழுவதும் சரக்கு ரயில்கள், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ‘பார்சல்’ சிறப்பு ரெயில்கள் தொடர்ந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களும் 3-ந் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement