மனைவியின் பிரிவு.. அந்த காரியத்தால் சுய நினைவையே இழந்தேன்.! மனம் திறந்த நடிகர் அமீர்கான்!!



ameer-khan-open-talk-about-his-first-wife-divorce

பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர் கான். அவரது நடிப்பில் உருவான சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் அண்மையில் வெளிவந்தது. அவர் அதற்காக ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்குடன் கலந்துரையாடி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்பொழுது அவர் கூறியதாவது, எனது முதல் மனைவி ரீனா தத்தா. அவர் என்னை விட்டு பிரிவதாக கூறி சென்ற அன்று மது அருந்தினேன். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடம் தினமும் குடித்தேன். என்னால் தூங்கவே முடியாது. மேலும் அதிக மது குடித்து சுயநினைவையும் இழந்தேன். உயிரை மாய்த்து கொள்ள கூட முயற்சி செய்தேன் என கூறியுள்ளார்.

Ameer khan

நடிகர் அமீர் கான் தனது முதல் மனைவி ரீனா தத்தாவை திருமணமாகி 16 வருடங்களுக்கு பிறகு பிரிந்தார். தொடர்ந்து அவர் 2005ல் கிரண் ராவ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பின்  2021ல் அவரையும் விவாகரத்து செய்தார். தற்போது அமீர் கான் தனது நீண்டநாள் தோழியான கவுரி ஷிண்டேவுடன் உறவில் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: சீதா திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்! சிறகடிக்க ஆசை புரொமோ வீடியோ..

இதையும் படிங்க: மகாநதி தொடரில் ஏற்படும் மாற்றம்.! இனி அவர் கிடையாதா?? தீயாய் பரவும் தகவல்!!