கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?
மகாநதி தொடரில் ஏற்படும் மாற்றம்.! இனி அவர் கிடையாதா?? தீயாய் பரவும் தகவல்!!

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கும் தொடர்தான் மகாநதி. இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும் மகாநதி தொடரில் வரும் விஜய் மற்றும் காவேரி கதாபாத்திரத்திற்கும், அவர்கள் நடித்த காட்சிகளுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
மேலும் ஒவ்வொரு நாளும் அத்தொடரின் ப்ரமோவை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மகாநதி தொடரை பாரதி கண்ணம்மா, ராஜா ராணி போன்ற தொடர்களை இயக்கிய பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.தொடரில் காவேரியாக லக்ஷ்மி பிரியா, விஜய்யாக சுவாமிநாதன் நடித்து வருகின்றனர்.
மேலும் கங்கா கதாபாத்திரத்தில் தாரணி ஹெப்சிபா மற்றும் குமரன் கதாபாத்திரத்தில் கம்ருதீன் மற்றும் யமுனாவாக ஆதிரையும், நிவினாக ருத்ரன் பிரவீனும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத மாற்றம் வரப்போகிறது என இயக்குனர் பிரவீன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். அதன்படி யமுனா கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஆதிரை தொடரில் இருந்து வெளியேறியுள்ளார், அவருக்கு பதில் இனி நடிகை ஸ்வேதா என்பவர் யமுனாவாக நடிக்க உள்ளாராம்.
இதையும் படிங்க: பசங்க பட நடிகர் ஸ்ரீராமுக்கு டும்டும்டும்! குவியும் வாழ்த்துக்கள்..
இதையும் படிங்க: வில்லனை கதறவிட்ட அரசி! இதுதான் என் நோக்கம்! கோவத்தில் என்ன செய்கிறார் பாருங்க! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ...