Video : காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்! அடுத்த நொடியே காதலனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! வேடிக்கை பார்த்த காதலி! பதறவைக்கும் வீடியோ காட்சி....

பார்க்குகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள் போன்ற இடங்கள் காதல் ஜோடிகளுக்கு அமைதியான தருணங்களை வழங்கும் அழகிய சூழல்களாக இருந்தாலும், சில நேரங்களில் இவை அபாயகரமான அனுபவங்களாக மாறக்கூடும். சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, இது போன்ற நிகழ்வின் தாக்கத்தை உலகிற்கு நினைவூட்டியுள்ளது.
வீடியோவில், தனது காதலியிடம் ப்ரோபோசலை சொல்ல காதலன் ஒரு நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறார். அந்த சந்திப்பு அழகான தருணமாக இருக்க வேண்டியதாயிருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக அது மரணமடைந்த கடைசி தருணமாக மாறுகிறது.
நீர்வீழ்ச்சிக்கரையில் காதலியிடம் பேசிக் கொண்டிருந்த காதலன் திடீரென கால்தடுமாறி நீரில் அடித்துச் செல்லப்படுகிறார். "என்னை காப்பாத்து!" எனக் கதறியும், காதலி பாதுகாப்பு பற்றிய பயத்தால் எந்தவொரு உதவியும் செய்யவில்லை. இந்த காட்சியே பலரின் இதயங்களை உலுக்கியுள்ளது.
காதலியின் செயல் சமூகத்தில் கேள்விக்குறி
காதலன் உயிர் ஆபத்தில் இருந்தபோதும், காதலி எந்தவொரு முயற்சியும் செய்யாதது பலரிடையே விசுவாசம், பாசம், பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றைப் பற்றிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை X தளத்தில் அபிஷேக் ஆனந்த் என்ற பயனர் பதிவிட்டார். இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட லைக்குகள், நூற்றுக்கணக்கான கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. “முடிவில் என்ன நடந்தது?”, “காதலி மோதிரத்தை பெற்றாரா?”, “பாவம் காதலர்கள்!” போன்ற உணர்வுப்பூர்வமான கருத்துகள் சமூகத்தில் பரவுகின்றன.
बंदी को शादी के लिए प्रपोज कर रहा था…. ख्वाब पूरे होने से पहले ही झरने में बह गया….. गर्लफ्रेंड बचाने के लिए कूद नहीं सकी…pic.twitter.com/qmipVFrCZk
— Abhishek Anand (@TweetAbhishekA) July 5, 2025