காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
திருமண ஆடையில் மணக்கோலத்தில் சிறகடிக்க ஆசை நாயகி கோமதி பிரியா! அதுக்குள்ள திருமணமா? வைரலாகும் வீடியோ...

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல், தற்போது டிஆர்பி யில் முதலிடம் பிடித்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
குடும்பத்திற்குள் நடைபெறும் குழப்பங்களை மையமாகக் கொண்டு நகரும் இந்த சீரியலில், முக்கியமான கேள்வியாக “ரோகிணி எப்போது சிக்கப் போகிறாள்?” என்ற எதிர்பார்ப்பு தான் கதையின் முக்கியமாக உள்ளது. கோமதி பிரியா இந்த சீரியலில் முக்கிய கதாநாயகியாக நடித்துவருகிறார்.
மதுரையைச் சேர்ந்த கோமதி பிரியா, இதற்கு முன்னர் பாவம் கணேசன் உள்ளிட்ட சில விஜய் டிவி சீரியல்களில் நடித்திருந்தாலும், சிறகடிக்க ஆசை தான் அவரை பிரபலமாக்கிய முக்கியமான மெகா சீரியல் ஆக மாறியுள்ளது. தற்போது பலர் வீட்டிலும் கோமதி பிரியாவை "மீனா போல" பார்த்து கொண்டாடுகிறார்கள்.
இதையும் படிங்க: தந்தையான பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன்! மகனுடன் எடுத்த முதல் புகைப்படத்தில் வைரலாகும் வீடியோ! குவியும் வாழ்த்துக்கள்..
சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ
சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயல்படிக்கொண்டிருக்கும் கோமதி, சமீபத்தில் திருமண ஆடையில் உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கிறிஸ்தவ திருமண உடையில், பூந்தொட்டியுடன் வலம் வரும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், “அதுக்குள்ள திருமணமா?” என ஆச்சரியமும் சந்தோஷமும் கலந்த கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சீரியலில் மட்டும் அல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் கோமதி பிரியாவின் தனித்துவம் தெளிவாக தெரிகிறது. அவரது திருமண காணொளி தற்போது சின்னத்திரை ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: மனைவியின் பிரிவு.. அந்த காரியத்தால் சுய நினைவையே இழந்தேன்.! மனம் திறந்த நடிகர் அமீர்கான்!!