குச்சியை கொண்டு மாலை மாற்றிக் கொண்ட தம்பதிகள்.! சமூக இடைவெளி என்ற பெயரில் இவர்கள் செய்யும் கூத்தை பாருங்கள்.!



Social distancing marriage using stick to exchange flowers

கொரோனா ஊரடங்கில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக குச்சியில் மாலையை மாட்டி இருவரும் மாறி மாறி மாலையை மாட்டிவிடும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது, சில திருமணங்கள் எளிமையான முறையில் நடைபெற்றுகிறது. அதிலும் சில திருமணங்கள் வீடியோ கால் மூலம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், மும்பையை சேர்ந்த ஜோடி ஓன்று மிகவும் வித்தியாசமாக திருமணம் செய்துள்ள சம்பவம் வைரலாகிவருகிறது.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக குச்சியை கொண்டு அவர்கள் மாலையை மாற்றிக்கொள்கின்றனர். எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் அவர்கள் உறவினர்கள் சிலர் மட்டுமே இருந்தனர். வித்தியாசமாக திருமணம் செய்வதாக நினைத்து தற்போது இவர்கள் செய்த காரியத்தை அனைவரும் கலாய்த்துவருகின்றனர்.

சமூக இடைவெளி என்பதே ஒருவரை ஒருவர் தொடாமல் விலகி இருப்பது தான். ஆனால் அந்த வீடியோவில் இருவரும் ஒரே குச்சியை வைத்து மாலை மாற்றியதால் இதற்கு எதுக்கு சமூக இடைவெளி என நெட்டிசன்ஸ் கமெண்ட் செய்துவருகின்றனர்.