Video : கொல பசியுடன் இருந்த Ribbon பாம்பிடம் சிக்கிய மீன்கள்! அசுர வேகத்தில் சாப்பிடும் பதறவைக்கும் காணொளி!



ribbon-snake-hunting-viral-video

கடும் பசியில் உள்ள Ribbon பாம்பு மீன் பிடிக்கும் அதிரடி காட்சி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. பசிக்கேற்ப அது காட்டும் வேகமும், விசித்திரமான நடையும் பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

Ribbon பாம்புகளின் வாழ்க்கை முறை

Ribbon பாம்புகள் என்பது அரை நீர்வாழ் வகையைச் சேர்ந்தவை. இவை பொதுவாக குளங்கள், நீரோடைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரப்பதமுள்ள வனப்பகுதிகள் மற்றும் புல்வெளி நிலங்களில் அதிகமாக காணப்படுகின்றன. தண்ணீரிலிருந்து அதிக தொலைவில் இவை அரிதாகவே காணப்படுகின்றன.

Ribbon பாம்பு

பாம்பின் அமைப்பும் தனித்துவமும்

வயது வந்த ஒரு Ribbon பாம்பு பொதுவாக 18 முதல் 26 அங்குலம் (சுமார் 46–66 செ.மீ) நீளத்தில் இருக்கும். இவை மிகவும் மெல்லிய உடலமைப்புடன் மூன்று வெளிர் நிறக் கோடுகளுடன் காணப்படும் தனிச்சிறப்புடைய உயிரினம். இதன் நுட்பமான உருவம், வேகமான நகர்வுகள் இதனை வேறுபடுத்துகிறது.

இதையும் படிங்க: வெற்றி எனக்குத்தான்! இறுதிக்கோட்டை பார்த்ததும் அசால்ட்டாக ஓடிவந்த வாலிபர்! இறுதியில் நடந்த டுவிஸ்ட்டை பாருங்க! வைரலாகும் வீடியோ...

குளிர்காலங்களில் இந்த வகை பாம்புகள் அதிகமாக பாறை குவியல்கள், மரத்தடிகள், மற்றும் உயரமான இடங்களில் நிலத்தடியில் ஒளிந்து வாழும் தன்மை கொண்டவை. இது அவற்றின் பாதுகாப்புக்காகவும், வெப்பத்தைக் காத்துக்கொள்ளவும் உதவுகிறது. இதோ அந்த வீடியோ காட்சி...

இதையும் படிங்க: டிவியை துடைப்பத்தால் அடி அடின்னு வெழுத்திய வாலிபர்! எதற்காக அப்படி செய்றாருன்னு பாருங்க! சிரிக்க வைக்கும் வீடியோ காட்சி..