10 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்ற அரசு பள்ளி ஹெட் மாஸ்டர்! மூக்கில் இருந்து வழிந்த ரத்தம்! தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி....



girl-abused-by-headmaster-krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு நடந்த துயரமான சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி முடிந்த பிறகு வீட்டுக்கு வந்த சிறுமி தொடர்ந்து சோகத்தில் மூழ்கியிருந்தார். மறுநாள் பள்ளிக்கு செல்ல மறுத்த அவரிடம் காரணம் கேட்ட தாயாரிடம் அவர் ஒரு அதிர்ச்சிகர தகவலை பகிர்ந்துள்ளார்.

ஆசிரியர் செய்த செயலால் ஏற்பட்ட அதிர்ச்சி

தலைமை ஆசிரியர் சாரதி, சிறுமியை தனியாக அழைத்துச் சென்று சில்மிஷம் செய்ததாகவும், மூக்கில் அடித்ததால் ரத்தம் வெளியானதாகவும் சிறுமி கூறியுள்ளார். இந்த தகவல் பெற்றவர்களை  அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையும் படிங்க: ஒன்றரை வயது குழந்தைக்கு சளி மருந்து வாங்கி கொடுத்த பெற்றோர்! அதிகாலை 4 மணிக்கு குழந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! துடிதுடித்து போன பெற்றோர்!

போலீசில் புகார் மற்றும் விசாரணை

தாயார் உடனடியாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் சிறுமியிடம் விரிவாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெற்றோரின் புகார் மற்றும் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், தலைமையாசிரியர் சாரதி சிறுமியிடம் தவறாக நடந்த விதம்  உறுதி செய்யப்பட்டது.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது

போலீசார் POCSO சட்டத்தின் கீழ் தலைமையாசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் பயம் மற்றும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவியரின் பாதுகாப்பு குறித்து சமூகத்தில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

 

 

 

 

இதையும் படிங்க: நண்பர்களுடன் சுற்றுலா சென்ற மகன்! 2 நாட்கள் கழித்து மகனிடம் வந்த அழைப்பு! அம்மா என்ன காப்பாத்து கதறி அழுத மகன்! கடைசியில் மகனுக்கு நடந்த கொடூரம்....