இந்தியா Covid-19

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.? ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் நல்ல முடிவை எடுத்திருக்கிறார்..! டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.

Summary:

PM Takes good decision to extend lock down says kejriwal

ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிப்பதாக பிரதமர் மோடி நல்ல முடிவை எடுத்திருப்பதாக டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த 21 நாள் உத்தரவு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வருகிறது.

இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவை நீடிப்பது அல்லது தளர்த்துவது குறித்து இன்று அணைத்து மாநில முதலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கால் மூலம் கலந்து ஆலோசித்துவருகிறார். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிப்பதாக பிரதமர் மோடி நல்ல முடிவை எடுத்திருப்பதாக டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள கெஜ்ரிவால்

"ஊரடங்கை நீட்டிப்பது என பிரதமர் நல்ல முடிவை எடுத்திருக்கிறார். ஊரடங்கை முன்கூட்டியே அமல்படுத்தியதால் பல்வேறு வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியா இன்றைக்கு நல்ல நிலையில் உள்ளது. இப்போது ஊரடங்கை நிறுத்தினால், இதுவரை பெற்ற பலன்கள் அனைத்தும் வீணாகிவிடும். இந்தப் பலன்களை உறுதி செய்வதற்கு, ஊரடங்கை நீட்டிப்பது அவசியமாகும்." என பதிவிட்டுள்ளார்.


Advertisement