இந்தியா

சுடுகாட்டில் இறந்தவரின் உடலை புதைத்த போது நடந்த சம்பவம்! அலறி அடித்து ஓடிய மக்கள்!

Summary:

old man alivie in Crematorium

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் மாலிக் என்ற 55 வயது நிரம்பியவர் ஆடு மேய்த்து வருகிறார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆடு மேய்க்க சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இதனால் அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர் ஆடு மேய்க்கும் பகுதியெல்லாம் தேடியுள்ளனர்.

அப்போது ஒரு இடத்தில் மாலிக் மயங்கிய நிலையில் கிடைந்ததைக் கண்டு, அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இறந்துவிட்டதாக நினைத்து வீட்டிற்கு எடுத்துச்சென்று அவருக்கு இறுதிச்சடங்கை செய்தனர். மேலும் வெளியூரில் இருக்கும் அவரின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவரை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்றனர். 

சுடுகாட்டில் அவரை புதைப்பதற்காக தோண்டிய குழிக்குள் அவரது உடலை வைக்கும் போது, திடீரென்று தலை மட்டும் அசைந்துள்ளது. இதைக் கண்ட அங்கிருந்த சிலர் அலறி அடித்து கொண்டு அவரது உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது மாலிக் கடுமையான காய்ச்சலில் இருந்துள்ளார். இதனால் மயக்கம் போட்டு விழுந்துள்ளார், அவர் உயிருடன் தான் உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறிது நேரம் ஆகியிருந்தால், மாலிக்கை மண்ணுக்குள் புதைத்திருப்பார்கள். கடைசி நிமிடங்களில் தலைஅசைந்தால் அவரை காப்பாற்றி இருக்கிறார்கள் என்று மாலிக்கின் உறவினர்கள் கூறுகின்றனர்.


Advertisement