இப்படியெல்லாமா பெயர் வைப்பது! தனக்கு பிறந்த இரட்டை குழந்தைக்கு கொரோனா, கோவிட் என பெயர் வைத்த பெற்றோர்..! எங்கு தெரியுமா?



new-born-twin-babies-name-as-corona-and-covit

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து வரும் நிலையில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைக்கு கொரோனா, கோவிட் என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் நிறைமாத கர்ப்பிணியான ப்ரீத்தி வர்மா. இவருக்கு சமீபத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த இரண்டு குழந்தைக்கு தற்போது பெயர் சூட்டியுள்ளனர்.

corona

அதில் பிறந்த ஆண் குழந்தைக்கு கோவிட் எனவும் பெண் குழந்தைக்கு கொரோனா எனவும் பெயர் சூட்டியுள்ளனர். இது குறித்து ப்ரீத்தி வர்மா கூறுகையில் பலவிதமான சிரமங்கள் மத்தியில் குழந்தை பிறந்ததால் நினைவு கூறும் வகையில் இந்த மாதிரி ஒரு வித்தியாசமான பெயரை வைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் அவர் வரும் காலத்தில் குழந்தைகளின் பெயரை மாற்ற நினைத்தால் மாற்ற உள்ளதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.