இந்தியா Covid-19

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்.? பிரதமர் மோடி தகவல்.!

Summary:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று நாட்டு மக்களிடையே மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்தவகையில், 71வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி விரைவில் கிடைத்துவிடும் என்றாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து நாம் கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரை 7 நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

தடுப்பூசியை மனித உடலில் செலுத்தி பரிசோதிக்கும் முக்கிய கட்டத்தில் ஆராய்ச்சி நிறுவனங்கள் தற்போது உள்ளன. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டடம் நடைபெற்று வரும் நிலையில், பல விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக பிரதமர் கூறினார்.


Advertisement