இந்தியா

பிரசாதத்தில் சயனைடு கலந்துகொடுத்து 10 பேரை தீர்த்துக்கட்டிய போலி மந்திரவாதி! விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!

Summary:

man killed 10 people with cyanide


ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வேலங்கி சிம்ஹாத்ரி என்ற சிவன் கிருஷ்ணா சமீபத்தில் நடந்த ஒரு கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சாதாரணமாகத் தொடங்கிய இந்த விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் தன்னிடம் சக்திகள் இருப்பதாக கூறி மக்களை அவர் ஏமாற்றி வந்துள்ளார். ஏமாந்தவர்களிடம் இருந்து பணம், நகைகளை பறித்தபின் அவர்களுக்கு பிரசாதத்தில் சயனைடு கலந்து கொடுத்து அவர்களை கொலை செய்திருக்கிறார்.

ஆனால் அவர் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் சிலரின் மரணங்களில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் எழுப்பியதால் அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, சிவன் கிருஷ்ணா குறித்த உண்மைகள் வெளியாகியுள்ளன.

மேலும் அவரின் செல்போனை போலீசார் ஆராய்ந்த போது அதில் இறந்தவர்களின் செல்போன் எண்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் புதைக்கப்பட்ட உடல்களை வெளியில் எடுத்து சோதனை தடயவியல் நிபுணர்களை கொண்டு சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் போலி மந்திரவாதி சிவன் கிருஷ்ணாவை கைது செய்துள்ள போலீசார், அவருக்கு சயனைடு வழங்கியதாக விஜயவாடாவில் நிக்கல் பூச்சு பட்டறை நடத்தி வரும் ஷேக் அமினுல்லாவையும்  கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  இதுவரை 10 பேர்களை சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement