இந்தியா

சொகுசு பைக் கொடுத்தால்தான் தாலி கட்டுவேன் மணமகனின் ஆவேசம்!. கோவத்தில் பெண்வீட்டார் மணமகனை மடக்கி பிடித்து மொட்டையடித்தனர்!

Summary:

man avoided marriage for dowry

லக்னோவில்  வரதட்சணை கொடுமையால் அதிர்ச்சியடையும் வகையிலான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  திருமணத்திற்காக அதிகப்படியான வரதட்சணையை மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர்.  

திருமணத்தன்று மணமகனுக்கு சொகுசு பைக் வேண்டும் என கேட்டுள்ளார். மேலும் அதை வாங்கி கொடுத்தால் தான் தாலிகட்டுவேன் என மணமகன் கூறியுள்ளார். இதனால், மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தார்கள், மண்டபத்தை விட்டு வெளியேற முயன்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார், மணமகனை மடக்கி பிடித்து மொட்டை அடித்துள்ளனர். மேலும் மணமகனின் தந்தை, சகோதரன் ஆகியோருக்கும் மொட்டை அடித்துள்ளனர். இதனில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 


Advertisement