நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
இந்தியாவில் ஒரே மாநிலத்தில் மட்டும் 5,649 பேர் பாதிப்பு..! முதல் இடத்தில் சிக்கி தவிக்கும் மஹாராஷ்டிரா.!

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியவை பொறுத்தவரை 20,471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 652 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கொரோனாவை கட்டுபடுத்த இந்திய அரசு பலவேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக வரும் மே 3 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 5,649 இம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் ஒரே நாளில் 431 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யயப்பட்டு, இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது மகாராஷ்டிரா.