கல்லூரி மாணவிகள், பேராசிரியர்களின் மார்பிங் போட்டோ... செல்போனுக்குள் ஒளிந்திருந்த சகல சாம்ராஜ்ஜியம்! மனைவியின் அந்தரங்க வீடியோவை வைத்து கணவன் செய்த... கேரளாவை உலுக்கிய தொடர் கைது சம்பவங்கள்...!!!



kerala-obscene-video-sales-arrests

கேரளாவில் செல்போன், இணையதளம் வழியாக ஆபாசக் காட்சிகளை விற்பனை செய்ததாக அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியைகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து விற்ற மாணவர் சிக்கியுள்ளார். கொல்லத்தில் சொந்த மனைவியுடன் இருந்த அந்தரங்கக் காட்சிகளை ரகசியமாக பதிவு செய்து இணையதளத்தில் பதிவேற்றிய கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகள், பேராசிரியைகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து விற்பனை

கொச்சி திருக்காக்கரை பகுதியில் உள்ள பாரதமாதா கல்லூரியில் படித்து வந்த ஸ்ரீஹரி என்பவர், கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியைகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவற்றை டெலிகிராம் குழுக்கள் மூலம் விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சூனியம் வைத்ததாக சந்தேகம்.. மருமகளை கோடரியால் தாக்கிய 70 வயது மாமனார்.. நாக்பூரில் அதிர்ச்சி!

இதுதொடர்பான விசாரணையில் ஸ்ரீஹரியும் அவரது நண்பரும் போலீசாரிடம் சிக்கினர். இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மனைவியின் அந்தரங்கக் காட்சிகளை இணையத்தில் பதிவேற்றிய கணவர்

இதற்கிடையில், கொல்லம் மாவட்டம் கொட்டியம் பகுதியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் இருந்த அந்தரங்கக் காட்சிகளை ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளார். அதை பின்னர் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றி விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

புகார் மற்றும் விசாரணையின் அடிப்படையில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கேரளாவில் இணையவழி ஆபாச உள்ளடக்க விற்பனை தொடர்பாக அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க: கணவனை கொன்றுவிட்டு ரத்தத்தை நெற்றியில் திலகமிட்ட மனைவி.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!