இந்தியா

பேருந்து - லாரி நேருக்குநேர் மோதி கோரவிபத்து... சுக்குநூறாக நொறுங்கியதில் 8 பேர் பலி..! 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

Summary:

பேருந்து - லாரி நேருக்குநேர் மோதி கோரவிபத்து... சுக்குநூறாக நொறுங்கியதில் 8 பேர் பலி..! 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தனியார் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்ளி அடுத்த கோலாப்பூரில் இருந்து நள்ளிரவு 1 மணியளவில் பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

ஹூப்ளி - தார்வாத் பைபாஸில் பேருந்து சென்றபோது எதிர்திசையில் அரிசி லோடு ஏற்றி வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த கோர விபத்தில் லாரியின் முன் பகுதியும், பேருந்தின் முன் பகுதியில் சுக்குநூறாக நொறுங்கிய நிலையில், இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் உயிரிழந்துள்ளனர்.தொடந்து பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்த நிலையில், சக வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு இந்த விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்தில் பலத்த காயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement