இந்தியா

பேருந்து பயணத்தில் பயங்கர தீ விபத்து.. 4 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்... 22 பேர் படுகாயம்.!

Summary:

பேருந்து பயணத்தில் பயங்கர தீ விபத்து.. 4 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்... 22 பேர் படுகாயம்.!

கோவிலிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்தில் தீப்பிடித்ததில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

ஜம்முவில் உள்ள கட்ரா மலை அடிவார நகர் வழியாக வைஷ்ணவதேவி கோவிலுக்கு பக்தர்கள் பேருந்தில் செல்வது வழக்கமான ஒன்றாகும். இந்த நிலையில், அதேபோல கட்ரா பகுதியை நோக்கி வைஷ்ணவதேவி கோவிலில் இருந்து வந்து கொண்டிருந்த ஒரு பேருந்தில் தீ பிடித்துள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 22 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்து, காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

தொடர்ந்து இந்த தீவிபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Advertisement