இது ஒரு குத்தமா? பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முகத்தில் கேக் பூசிய நண்பன்! ஆத்திரமடைந்த வாலிபர் செய்த அதிர்ச்சி...! நடுங்க வைக்கும் சம்பவம்!!!
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. கேக்கை முகத்தில் தடவியதால் ஆத்திரமடைந்த வாலிபர், தனது நண்பரை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த பவன் நாயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கேக் தடவியதால் தொடங்கிய தகராறு
லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்பவர் தனது தம்பி ரிஷு மற்றும் நண்பர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் நடந்த கொண்டாட்டத்தின்போது, நீரஜின் நண்பரான பவன் நாயர் விளையாட்டாக அவரது முகத்தில் கேக்கை தடவியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கத்தியால் சரமாரியாக குத்திய நண்பர்
அங்கிருந்தவர்கள் தகராறை சமாதானப்படுத்த முயன்றும், நீரஜின் ஆத்திரம் குறையவில்லை என கூறப்படுகிறது. அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து பவன் நாயரை சரமாரியாக குத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலத்த காயமடைந்த பவன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
மருத்துவமனையில் உயிரிழப்பு; இருவர் கைது
இதையடுத்து நண்பர்கள் உடனடியாக பவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். தகவலறிந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பிறந்தநாள் கொண்டாடிய நீரஜ் மற்றும் அவரது தம்பி ரிஷு ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்ட கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ముఖానికి కేక్ పూశాడని.. ఫ్రెండ్ని చంపిన బర్త్డే బాయ్
— PulseNewsBreaking (@pulsenewsbreak) September 18, 2026
జమ్ములోని జానిపూర్లో లోయర్ రూప్ నగర్ ప్రాంతంలో వెలుగు చూసిన ఘటన
తన తమ్ముడు రిషు, ఫ్రెండ్స్తో కలిసి.. రోడ్డు పక్కన బర్త్డే వేడుకలు జరుపుకున్న నీరజ్
ఈ క్రమంలో పవన్ నాయర్ అనే స్నేహితుడు నీరజ్ ముఖంపై సరదాగా కేక్ పూశాడు… pic.twitter.com/SQIWqAjms0
இதையும் படிங்க: தங்கையின் மரணத்திற்கு பழிவாங்கியதாக பரபரப்பு.. கணவனை கொன்றதாக தம்பி வெளியிட்ட செல்ஃபி வீடியோ!