கொரோனா போராட்டத்தில் வெற்றிப்பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கும் இந்தியா! வெளியான மகிழ்ச்சி செய்தி!



India developed in corona control

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸின் பரவல் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,109 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 62,939 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

corona

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா வெற்றிப்பாதையில் முன்னேறிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 12 நாட்கள் என தொடர்கிறது.

கொரோனா பாதித்தவர்களில் குணம் அடைவோர் எண்ணிக்கை 30 சதவீதத்தை தாண்டி விட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. 4 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தாக்கவில்லை என்ற மகிழ்ச்சியான தகவலை மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.